ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தட்டிவிடும் - தொழுகை


 

தட்டிவிடும் சக்ராத்வேதனையத் தட்டிவிடும் - தொழுகை
சுவர்க்கக் கதவின் திறப்பு !

வாதாடும் அல்லாஹ்விடம் வாதாடும் தொழுகை
பாவக்கறை அகற்றும் சோப்பு !

பொறுமையும் பெருமையும் தொழுவருககருக் கென்றென்றும்
பரிசாய் கிடைக்கும் ஜன்னத்துல் பிர்தொஸ் !

ஓதாமல் இருக்கும் மனமே பாழ்வீடு
சுட்டு எரிக்கும் நெருப்பு !

போட்டி பொறாமை கெ ட்டவர்களுக் கெப்போதும்
நல்ல பாம்பின் அழகு !

பொழியும் இறையருள் நினைக்காமல் கிடைக்கும்

மாணிக்கத்துக்கு கேற்ற மதிப்பு !

நினைவுகளில் கனவுகளின் ஏக்கங்கள் ...!





நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள் ...!
இரவின் மறைவில்
விடியலின் உதிர்ப்பில் 
மருந்தும் கையுமாய்
எழுந்தும் எழும்பாத
நிலையில் நாம் ..!

உள்ளத்து உணர்வில்
விண்ணும்,மண்ணுமாய்
இடியும் மின்னலுமாய்
கடலும் அலையுமாய்
இன்னும்.இன்னுமாய் ..
நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள்
கொஞ்சம் மனதில்
வேதனைத் துளிகள் ...!
காலையும், மாலையும் நகரும்
வைத்தியர்களுடனும் தாதிகளுடனும்.
குடும்பத்தாருடனும் ,பார்வையாளர்களுடனும்
அனுதாப் பேச்சுக்களுடனும்.!
பிறப்பின் விதையில்
மரணப் பயிர் -முளைக்கிறது.!
போட்டிப் பூக்களும் பொறாமைப் பூக்களும் ,
வஞ்சகக் பூக்களும் ,
சூது வாதுப் பூக்களும் , பலவண்ண
குனப்பூக்களும் , பேய்களும்
பிசாசுகளும்
என் படுக்கையைகிழித்து
ஏளனமாய்ச் சிரிகிறது.!
மனதுக்குள்
விதி சதியாய் மாறிப்
போராடுகிறது.!
வாழ்வில்
துன்பங்களும், துயரங்களும்
மட்டுமே
கவலையின்றிச்
உடம்பினைச் சுமக்கின்றது !

அல்லாஹ்வே அருள்




மனதில் மகிழ்வும் முகத்தில் சிரிப்பும் 
மண்ணில் அமலும் மறுமையில் நன்மையும் 
பெறும் படியாய் நல்லருள் தருவாய் 
பொழிவாய் அல்லாஹ்வே அருள் !

புனிதம் மணக்கும் ஹஜ் ..!


மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் ,
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!
பாவத்தை யகற்றி நெஞ்சை
பாலென மாற்றும் ஹஜ்ஜை !
தாபமாய் தரிசித் தோர்கள்
தரனியில் ஹாஜி யாவர் !
இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்பார் ஹஜ்ஜில் தானே !
சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே
ஆடைகளை புதிதாய் பூண்டு
அகந்தனில் மகிழ்ச்சி பூண்டு
வாழுவோர்க் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே !
ஸம் ஸம் தண்ணீரை மாற்றி
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ ந்திடும் ஹஜ்ஜே வாழி ..!

01-அல்லாஹ்வின் அருட்கொடை தனிலே அருளுண்டு
ரப்பில் ஆலமீன் ரஹ்மத்தாலே - நல்ல
வரங்கொண்ட வல்லோன் அருள்மறை ஓதுகின்ற
நாவல்லவோ தீனுல் இஸ்லாம் !


02-இல்மை கற்பிக்கும் இதயம் வேண்டும் இறைவனே 
அருளை தந்தான் அல்குர்ஆணை; இறக்கினான்
அறிவினை தொலைக்காதே அல்லாஹ்வை தொழுதுபார் !
சுஅரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !


03-
அரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !

.மனம் மகிழும்நாள் ! மக்கா நகரில் 
மானிடர் வரவைக் கண்டு களிக்கும்நாள்!
எண்ணி லடங்கா ரஹ்மத் .

இறையின் சிறப்பு !


மகத்து மண்ணில் ஸம் ஸம் ஊற்றில்
நாவினை சுவைக்கும் நீர்!
மக்கள் நிறையும் மக்கமா நகரில்
ஹஜ்ஜினை நிறைவேற்றும் ஹாஜி
சபா மர்வாவில் ஓடும் தொங்கோட்டத்தில்
மாறிடும் வியாதியின் தொல்லை !
வெள்ளை ஆடையில் காபன் உடையில்
மரணத்தை நினைக்கும் உயிர் !
ஈமானிய நெஞ்சத்தில் இனிமையான உணர்வு
படைத்த இறைவனுக்கு நன்றி !
மறுமை வாழ்வில் மண்ணறை வாழ்க்கையில்
தெரியும் இறையின் சிறப்பு !

சனி, 28 பிப்ரவரி, 2015



உன் உயிரில்,
உன் உறவில்,
உன்சுவாசத்தில் ,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால்
யாரும் இல்லாத போது
உனக்காக நான் மட்டும் இருப்பேன்
உன்மையான -
உன் உயிர்த் தோழியாக !

அவள்
மனசு எனக்கு தெரியாது
என் மனசு
அவளுக்கு தெரியாது
ஆனாலும் -
"ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகளாய்"


கருவில் வளர்ந்து கல்பில் நிறைந்து
அன்னையின் வடிவமாய் அப்படியே இருக்க
உயிரும் உள்ளத்தின் உணர் வுகளுமே
கண்ணில் காணும் கனவு !

அன்பின் மனசு காட்டுவது அருட்கொடை!
உள்ளத்தின் உணர்வும் வரமாகி உயிரும்
உண்மையின் பேரெழில் ! உத்தம நண்பியை
இதயத்தில் வைத்தே இரு.

அன்புகாட்டும் பாசமிகு அண்ணியை உள்ளத்தினில்!
அணைத்தேன் அம்மாவைப் போல் அப்படியே -துள்ளும்
இதயத்தில் பாசத்தை ஊட்டினேன் உள்ளக்
கதவும் திறந்தது கண்டு

அத்தான் ..என்றலருகிறாள் அனீதா
அவனோ டுபா(ய்)யினிலேவானாள்
எத்தனையோ கனவுகளை
இதயத்தில் சுமந்த இவள்
பித்தானாய் வாழ்வு இனி வீணாள் !

முன்னேற்றப் படியை மூடிவிடும் பகை
விளையாடும் விதியை விலக்கிடத் துடிக்கும்
அறிவை ! அதையும் அழகாய் காட்டும்
கல்வியை போதிக்கும்குரு சுடர்.

நலமே செய்யும் உருவங்கள்!



காட்டில் வாழும் மிருகங்கள்
கயமை செய்யா உருவங்கள்!
நாட்டில் வாழும் மனிதரிலும்
நலமே செய்யும் உருவங்கள்!
ஏட்டில் படித்த அறிவில்லை
இறையைக் காணும் நெறியில்லை!
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலி(ல்)லை !
உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை !
கயமை மிருக வாழ்க்கையிலே
கானல் கூட அரிதாகும்!
பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை!
கருமை நெஞ்சத் திலுமில்லை!
காட்டில் ஒன்றைக் கூடிவரும்
உள்ளம் தன்னில் ஒரு எண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும்
காட்டு மிருகம் மேலாமே....

கையெழுத்து! தலையெழுத்து!



பிச்சை போட வேண்டாம்!
புகழ் தேட வேண்டாம்!
ஏழை எளியோரை நினைத்துப் பாருங்கள் – அந்த
அல்லாஹ்வே உங்களுக்குத் துணையிருப்பார்!
இருப்பதை வைத்துச்
சிறப்பாய் வாழ்வோம்
இறைவனை வணங்கி!
நிம்மதியாய் இருப்போம்
போட்டி பொறாமை
சண்டை சச்சரவு
இவையெல்லாம் எதற்கு?
மனதிலே விஷமென்றால்
எதற்கு மனிதாபிமானம்?
மனதில் நச்சுத்துளி கலந்து
சமூகத்துக்கு எழுதி என்ன பயன்?
உறவுகளைப் பசிக்க விட்டுவிட்டுப்
பணத்தினைக் கட்டிக்காத்து என்ன பயன்?
மனமும் உடலும் கருகிய பின்
குடும்பம் இருந்து என்ன பயன்?
சோற்றில் விஷத்தைப் போட்டுவிட்டு
வேடிக்கை பார்த்து என்ன பயன்?
உறவே சீரழிந்த பின்
பணமும் பிணமும் எதற்கு?
எழுத்தில் எல்லா வரிகளும்
தலைக்கனம் நோக்கிப் போகிறது!
உடலும் உள்ளமும் ஊனமுற்றே
வாழ்வு வீணாய்ப் போகிறது…
கையெழுத்து
நன்றாகயில்லையெனினும்
பரவாயில்லை – தலையெழுத்து
நிம்மதியாக அமைய
வழிகாட்டுங்கள்…!
ஒருவனின் கதை கவிதை கட்டுரை அல்ல
ஒரு இனத்தின் வேதனை…!


அன்னையின்அன்பே அணைத்திடும் ஆத்மாவின்
அரவணைபாம்:தொப்புள்கொடிஇணைதல் அருளாம்:
அழுகின்ற சிசுக்கு கொடுக்கின்ற பால் .


மரணத்தை நாடிப் பிறந்தவர்கள்
நாம் -
வாழப் பிறந்தவர்கள் அல்ல
இதயம் உண்டு 
எதையும் சுமக்க
வாய் உண்டு
கொடுமை மறைக்க
மானம் உண்டு
மரியாதை காக்க
உள்ளம் உண்டு
அன்பை சுமக்க
அச்சம் உண்டு
இறையை வணங்க
எல்லாம் இருந்தும் ஏது பயன் ..?
உயிர் அற்றுப் போகும் உடம்பாச்சே
உடலை விட்டுப் போகும் உயிராச்சே ..!


என் தாயே ,
என்னை நீங்க பார்க்க வராவிட்டாலும்
நான் -
உங்களை பார்க்கவரலாம் தானே ?
நீங்க
சென்ற இடத்தை ,
நானும் வந்து தரிசிக்க முடியுமென்பதை
புரிந்து கொண்டேன்
தாயே -
நீங்க சென்ற பயணம் திரும்பி வரக்கூடாத பயணம் தான்
ஆனாலும் -
விரும்பக் கூடாத பயணம் அது


சும்மா கிடப்பதுவும்
சோர்ந்தே படுப்பதுவும்
இம்மை வாழ்வுக்கே
இடராகும் !அறிவீரோ ?
என்றும் வாழ்வுதனை
எழிலாய் அமைத்துவிட
நன்றாய்த் தொழில்செய்தல்
நலமாகும் !அறிவீரோ ?
அல்லும் பகலிலும் நீ
அயரா(து )உழைப்பதனால்
தொல்லை பல நீங்கும்
துயரம் பரந்தோடும் !
கொள்ளை கொலைசெய்யும்
கொடூர மனபாங்கு
உள்ளத்தைநாடா(து)
உயர்வு தேடி வரும் !
வறுமை அகன்று விட
வாழ்வுசிறந்து விட
பெருமை வாழ்வில்வர
பொறுமையோடு உழை !
துணிவுகொண்டு உழை
சுறு சுறுப்புஅடை
கனியும் வாழ்வு -ஒரு
கனியாகி மணக்கும்

செவ்வாய், 27 ஜனவரி, 2015

அண்ணல் நபி பெருமானார் .....!!



மக்கத்து மண்ணில் பிறந்தே -நல்ல
மார்கத்தை வளர்தனன் மனங்களிலே !
நேயமுடன் போதனை ஊற்றினான் -படு
பாவிகளை அன்பினால் மாற்றினான் !
இஸ்லாத்தை உலகில் பரப்பினான் -கொடும்
அடிமைத் தளையினை உடைத்தெரிந்தான்!
கூலித் தொழிலை மதித்தான் -வீணே
உண்டு மகிழ்வோரைத் தடுத்தான் !
கெட்ட குணங்களை விரட்டினான் -அல்
குர் -ஆணை ஓதிக் காட்டினான் !
இவ்வுலகை :விதை நிலமென்றான் -மறுமை
அறுவடையின் மகிழ்வினை சொன்னான் !
பெண்ணின் அருமையினை விளக்கினான் -பூவையரை
வாடிடாது காத்திடக் கூரினான்!
மண்ணில் அவளொரு மாணிக்கம் -உயர்வாய்
மதித்து காத்திடக் கூ ரினான் மாந்தற்கு !
சாதி மத பேதங்களை வெறுத்தொதிக்கினான் -நீதி
நேர்மை நியாங்களையும் மதித்து நடந்தான் !
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறிடாது வாழ்திட்டான் -மனித
மனங்களின் அன்பினை வென்றிட்டான் !
அண்ணலை மதித்து நடப்போமே -இனிய
அருள் கிடைக்கும் எமக்குமே !
அருள் மறை ஹதீஸ் இரண்டும் மனிதரிடமே -அமல்களின்
சுவர்க்கம் நரகம் அல்லாஹ் ஒருவனிடமே !

அண்ணல் நபியின் புகழ் பாடுவோம்....!



இறைத் தூதர் நபி நாதர் அவதரித்த
இனிதான தினமதனைப் போற்றிடுவோம் 
மறை தன்னை மாந்தர்குப் போதித்த
மா நபியை மனதாரப் புகழ்ந்திடுவோம் ...!
இருள் சூழ்ந்த அரபு நகர் தனிலுதித்த
இறைவனின் தூதரென ஆகிவிட்ட
அருள் மிக்க அன்னலினைப் போற்றிடுவோம்
அகிலத்தின் ஒளி தன்னைத் துதித்திடுவோம் ..!
அறியாமை தனை யோட்டி அறிவான
அமுதூட்டி இஸ்லாத்தைக் காத்து விட்ட
நெறியான நேஸரினைப் பாடிடுவோம்
நேஞ் செல்லாம் நிறைந்து விடப் பாடிடுவோம்
அகிலத்தின் ஜோதியென் வந்து தித்த
அன்னலெம் பெருமானைப் போற்றிடுவோம்
'வஹி' மூலம் வல்லோனைச் சந்தித்த
வள்ளலினை வாயாரப் புகழ்ந்திடுவோம் ...!

நாடியபடி ..!



வயிற்றுச் சுமையை 
இறக்கி வைக்க காத்திருக்கும்
பிரசவ நேரத்தில் -
என் கதறலின் வலியை
கேட்டவனாய்
மறைந்து செல்கின்றான் -
தங்கையை நாடியபடி ..!
தேடிய படி ......!!

கிள்ளி விளையாடாதீர்கள் ....!



வாழ்க்கையை குழி தோண்டி புதைத்துக்
கொண்டுதான் வாழுகின்றீர்கள்
மனித ஆத்மாவுக்கு 
பகையை புகையாய் மாற்றுகின்றீர்கள்
நம்பிக்கையான உள்ளங்களை
துரோகிகளாக மாற்றுகின்றீர்கள்
நாய்க்கு கொடுக்கும் மதிப்பைகூட,
மனிதர்களுக்கு காட்டாமல் இருக்கின்றீர்கள்
உடமைகளைக் கூட
தீயிட்டு எரிக்கிண்றீர்கள்
மான மரியாதைகளை காற்றில் பறக்க விடுகின்றீர்கள்
உங்களை நினைத்து நீங்களே
தலைக்கனம் பிடித்து புளகாங்கிதமடைகின்றீர்கள்
ஏழை எளியோரைக் கண்டால்
கண்டும் காணாமல் போகின்றீர்கள்
அடுத்தவனின் முன்னேற்றத்தை தடுத்து
தான் உயர நினைக்கின்றீர்கள்
துரோகத்தை அன்பாய் காட்டி
அடுத்தவன் சோற்றில்
ஏன்
சேற்றைப் பூசுகிண்றீர்கள் ...?

கண்ணில் படாது தடவிச் செல்லும் ,
சுவாசிப்பது மூச்சே ஆகும்!
பணமில்லாமல் பெறுகின்ற அன்பின்
பெறுமதி உலகில் எதற்கு நிகராயுண்டு ?

புகைப் படத்தின் அழகில் - மட்டும்
நட்பு புரியாது
மூச்சினை சுவாசிப்பது போல் - அன்பின்
உணர்வு புரிந்திட வேண்டும்....!

அன்பில் மகிழ்வாய் தோழி - நட்பு
புரிதல் தனைக்கொண்டு, வாழ்வில் - பாசம்
சுவாசமாய் மூச்செடுத்த இதயத்தின் உணர்வுகளாய் உளத்தில்
நிழலாடச் செய்யும் உறவுக் காற்று....!

கறைபடிந்த எச்சங்கள் ...!



சிலர் முன்னேற்றங்களில்
பிரியம் காட்டாத
அழுக்கடைந்த நாவுகள் 
சாக்கடை தோன்றும் கரங்கள்
விமர்சனப் பாணியில்
பொறாமைச் துளிகளை வடிக்கும்
வஞ்சகப் பா வாசிக்கும்
தூற்றிக் கவி எழுதும் ..!
தலைக்கணம் பிடித்த,
தரம்கெட்ட வம்பர்களால்
கலையுலகம்
மீன் வாடிகளாய்
பிலால் நாற்றமடிக்கும் ..!
சிந்தனைதுளிகளின்
ஊற்றுக்களை -
அடைத்து விட்ட
கொடூர நெஞ்சங்களால்
தாக்கப்பட்டு மனசு
நோவினை செய்யும் .
குரோத் உறவுகளினால்
நேசிக்கப்பட்ட
போலி பாசம் காட்டப்பட்ட
கரையான் மனசுகள் ,
போய் வேஷ முகங்கள்
வரலாற்றுப் புத்தங்களை
புழுவாய் அரித்துக் குவிக்கும்
கறைபடிந்த எச்சில்களை
உமிழ்ந்து துப்பும்
காறித் தீர்க்கும் !
அன்புள்ளங்கள் மட்டும்
நேசவுள்ளங்களின்
பாச விலாசங்களை
மாற்றமடைந்து விடாது
காக்கும் !
தாகமாகிப் போன
வரண்ட நாவுகளில்
ஈரங்களைத் தேடியழையும் பாதங்களாய் .....!

சிதறிப் போகும் மனங்கள் ....!



ஏழை மக்களின்
நாடித் துடிப்புக்களை
தடவிப் பார்த்து 
சுடரொளியை
இருள் வீட்டுக்கு
மின்சாரமாய் தருபவர்களே
மக்களெல்லாம்
எதிர் பார்த்த
மனச் சந்தோஷம் ,
குவிந்து வரும்
பணம் பட்டியளுக்காய் -
இப்போது -
மாதம் மாதம்
உங்கள்வருகையினை
எதிர்பார்த்து மனசு ஏங்கி தவிக்கும் ..!
வீடுகளுக்குள் வந்து
பாவனையில்லாதிருக்கும்
மின்சார பொருட்களுக்கு
வீண் கணக்கு போட்டு விடாதீர்கள் !
மீட்டரை பார்த்து விட்டு
பொய் சொல்லி
அப்பாவிகளிடம் -
பந்தம் தேடிப் பெறாதீர்கள் ..!
அல்லாஹ்வின் கட்டளை மீறி
உண்மைகளை மட்டும்
நிராகரித்து விடாதீர்கள் ....!
ஏனெனில் .....
என்றோ ஒருநாள் ..,
தீயவர்களின் செயலைப் பார்த்து
உன் இறைவன்
கடலை மாற்றி நரகமாய் காட்டி விடுவான் ,
நடக்கும் பாதங்களுக்கு
நெருப்பு பாதணி அனுவித்து .
உனது -
இந்த பயணத்தில்
அக்கினிப் பொறிகள்
நகர்வுகளைத் தடுக்கலாம் ..!
பாதைகளை மூடலாம் ..!!
விஷப் பாம்புகள்
வந்தெதிர்க்கலாம் .!!!
எனினும் உங்கள்
பொய்யான கணக்குகளால் ...,
ஏழைகளின் பணத்தை சுரண்டுவதால் ..,
நரக நெருப்புக்கு
விறகாய்ப் போகும்
பொய் சத்தியம் கூட ,
போலி கடிதங்கள் கூட ...!
நரகத்தில் வாழ
நல்லாத்மாக்கள் விடை கொடடுத்து மறையும் ..!
உங்கள் தொழிலை
சாம்பலாக்குவதற்க்காகவே
நெருப்பு மழை
மண்ணில்
பொழியலாம் .!
மின்னலை மிஞ்சிய
இடி முழக்கம்
குறி வைக்கலாம் ..!!
எனினும் ...,
நிம்மதியை நாடி
மன ஆறுதல் தேடும்
அப்பாவி ஜென்மங்களை
சந்தோசமாய் வாழ்வதற்கு
கபடித்தனங்களை மாற்றுங்கள் ..!,
புதையல் தேடும்
பணப் பேய்களின்
சுரண்டல் மனங்கள்
சிதறிப் போகட்டும் ...

மிதித்து புதைக்காதீர்கள் !



மனித நேயத்தை மிதித்துப்புதைக்காதீர்கள்
உயிருக்கு உத்தரவாதம்- 
போடாதீர்கள் !
பொறுமையைக் கண்டு
பொறாமைப் படாதீர்கள்
முன்னேற்றத்தைக் கண்டு
தடைவிதிக்க முயலாதீர்கள்
சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல
நடிக்க துணிந்து விடாதீர்கள்
பழகிய உள்ளங்களை
பழி வாங்கிடாதீர்கள்
தூய இதயங்களை
துயரினில் தள்ளி விடாதீர்கள்
உங்களை பற்றி நீங்களே
சிந்தித்துப் பாருங்கள் !
நல்லமனிதரைக் கண்டால்
தூற்றிப் பேசாதீர்கள்
வளரும் உள்ளங்களை
குழி தோண்டிப் புதைக்காதீர்கள்
அடுத்தவன் சோற்றில்
விஷத்தை கலக்காதீர்கள்
தன புராணம் பாடிப்பாடி
அடுத்தவனை தாழ்த்தி
தான் உயரப் பார்க்காதீர்கள் !
வெளிப் பார்வையில்நல்லவராய் நடிக்காதீர்கள்
உள்ளத்து உணர்வுகளில் தந்திரமாய் நடக்காதீர்கள்
மனிதனை மதித்து நடவுங்கள்
மாறாஅன்பினை பெற்று வாழுங்கள் !


உங்களுடன் பேசும் பொழுதுகள் யாவும்
கரையை தொடும் அலையாய் போகுது தோழி !
உன்னுடன் பேசி உறங்கிடப் போகையில்
மனசு ஏனோ ஏங்கித் தவிக்குது தோழி !
உங்கள் அருகில் நானும் இருந்து
வாழ்ந்திட ஏனோ மனசு துடிக்குது தோழி
எம்முடைய நட்பு உயிரிலும் மேலென
என்றென்னி சுவாசம் நகர்கின்றது தோழி !


நட்புள்ளங்களை சந்தேகிப்பது தவறு
புரிந்து கொள்ளு அன்பெங்கள் உயிர்நாடி
மண்ணில் நட்பொன்று தான்
மானிட உள்ளத்தின் உணர்வு - பாச
உள்ளத்தை புரிந்து நடத்தல் திறமை !


தலைக் கனம் நிலைக்காது நம்பு
நேர்மையாய் எழுதினால் பஞ்சமாபாதகங்கள் துரும்பு
பொறாமைகள் படுவதினால்
புகழ் வர மாட்டாது
கோபத்தை உடன் நிறுத்து எழுத்துக்களை வாழவிடு !

தினம் தினம் .....!



பகலில் சுமையாய் இருக்கிறேன்
இரவில் பிணமாய் கிடக்கிறேன்
வேதனைகளும் சோதனைகளும்
என்னை தொடரும் பொழுது
பல வருடங்கள்
எனக்கான தன்மானத்தை
காப்பாற்றி வந்த பின்
சுகத்தை நீ தடவிக் கொள்ளும்
அந்த சில் நொடிகளில் மின்னலாய் சிந்திக்கின்றேன்.
பனி காலத்திலும், நுவரெலியா
கிழக்கு மண்ணின் உஷ்ணமாய் சுடுகிறது.
அனலாய் சுடுகிறது மனசு
பெண்மை புனிதமானது
என்பதை புரியாதவர் பலர்
தாய்மையின் உணர்வுகளை
அடைவதற்காய் நாயாய்
அலைகின்றனர்.
ஒரு முட்டையின்
கருவாய் -
கற்பினை மட்டும் உடைத்து விடாது
காப்பாற்றுகிறேன்.
தினம் தினம் வெள்ளையாகிப் போகும் முடிகளும்..
உதிரிப் போகும் நினைவுகளும்.......
இருளாய் மாறும் நினைவுகளும்......
சுடராய் மாறும் பகல்களும்.....
நான் -
எது வந்திடினும்
மானத்தை காப்பதால்
மரியாதையை வளர்ப்பதால்
பெண்மையை போற்றுவதால் எப்போதும்
என் பெண்மை சூரியனாகவே பிரகாசிக்கின்றது.

இடறி இடறியே ..!



பசித்திருந்தோம் படிப்பதற்காக,
தனித்திருந்தோம்- .
தனித்துவத்தைக் காற்பதற்காக,
விழித்திருந்தோம்
விடியலுககாக ...!
ஆனாலும் ,
இன்னமும் தான் விடியவில்லை !
கருக்கலுக்குள்ளே தெரியும்
விடி வெள்ளியாய்
அடி மனதில் கனவுகள்!
உறுதியான வழியின்றி
உருகிக் கொண்டிருப்பதால்
மனங்களில்
ஊமைக் காச்சல் !
அடக்கு முறைகளில்
அடிமையாகிப் போனதால்
உணர்வலைகளில்
அக்கினிப் பிழம்பு
தெருப் பாடகனின் தகரடப்பாவாய்
எங்கள்தராதரங்கள்
தரமிழந்து போயின !
`தடைகளையும் படிகளாய் நினைத்து
நாங்கள் -
முன்னேறத் துடித்தோம்
இறுகிப் போன அந்தக் கற்களில்
இடறி இடறியே
எங்கள் பாதங்கள்
புண்ணாய்ப் போயின
நிறம் பூசிக் கொண்ட நரிகள்
நானே ராஜா வென்று
கூப்பாடு போட்டன
அரசியல் லாபம் தேடும்
பச்சோந்திக் கும்பல்கள்
எங்கள் தராதரங்களை
நிறம் மாற்றின ..!
நாற்காலியின் ஆசை சில
நலவர்களை
நயவஞ்சகர்களாக்கலாம்
நயவஞ்சகளே
நாற்காலிக்குள் அடக்கமானால்
பாவம்
அந்தநாற்காலி என்ன செய்யும் ....?
கம்பி எண்ணும் கைதிகளைப் போல
நாங்கள் -
நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்
சொடிததுப் போன
விரல்களை நீட்டி விட்ட படி
சொக்க வைத்த வாக்குறுதிகள்
கையில்
சிக்காமலே போனதை
எண்ணிய படி ...!
ஏனிப்படியில்
தலைக்கணமாய் ஏறும்
ஒல்லிச் சிறுவனைப் போல்
எங்கள் வயதுகள் -
ஆண்டுகளின் நகர்வில்
ஆங்காங்கே `நரை மயிர்கள்
இன்னுமொரு தராதரத்தைப்
பெற்றுக் கொண்டதாய்
பறை சாற்றுகின்றன ..!

பெண்மையா வேண்டும்....?



இறைவனின் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் ?
வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டனி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வரணிப்பதேன் ...?
கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....?

ஏர் பிடித் துழுவோம்



எழிலுரு உலக மாதா
இதயமாம் இளைஞர் சக்தி !
தொழிலெனும் கருவி கொண்டு 
துரத்துதல் ஆகும் :பொல்லா
இழிவிருள் வறுமை தன்னை
இரவியாய் மிளிரும் தூய
இளைஞரே ஒன்று கூடி
இன்பமாய் உழைக்க வாரீர்
பள்ளியில் படித்தோம் !மேன்மை
பட்டங்கள் யாவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி பூண்டு
குவலயம் தன்னை மீட்க
தெள்ளிய உணர்வி னோடு
திறம்பட உழைத்து மண்ணை
வெள்ளிடை மலையாய் என்றும்
விளங்கிட வைக்க வாரீர்
காடுகள் மாய்த்து நல்ல
கழனிகள் உண்டு பண்ணி
மேடுகள் வளப் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே !கண்டு பாடி
கூ டியே மகிழ்ந்து வாழ
கூ டியே உழைக்க வாரீர் !
ஏர் பிடித் துழுவோம் !நல்ல
எந்திரம் துனையாக் கொள்வோம்
போர்வைகள் தம்மை நீக்கி
புதுமைகள் உழைப்பில்செய்வோம் !
கார் மழை தன்னைத் தேக்கி
காசினிக் குதவும் வண்ணம்
சீர்மையாய் பயிர்க்குப் பாய்ச்சி
செகமது செழிக்கச் செய்வோம்
தேயிலை இறப்பர் தெங்கு
சிரித்திடும் வயலின் நெல்லு !
ஆய நற் கனிகள் நூறும்
அறு சுவைக் குதவும் யாவும்
நேயமாம் வளர்ப்ப தாலே !
நிலத்திடை வளங்கள் கூ டும்
சாயந் திடும் கதிர் வளர்த்தால்
தலையை நாம் நிமிர்த்த லாமே !
இளைஞர் கை இணைந்தா லிங்கு
எங்கிலை அபிவி ருத்தி ...?
வளைக் கரம் வாளை ஏந்தி
வயர் கதிர் அறுக்கும் போதும் !
களைதனைப் பிடுங்கி வீசி
காரிய மாற்றும் போதும்
களைந்து போம் வறுமைக் கோடு
காணுமே !வளர்த்தை நாடு !
உயர்வுக்கு இளைஞர் சக்தி ,
ஒன்று பட்டினையு மானால்
நயம் பல வந்து கூ டும்
நலிவுகள் மறைந்து ஓடும்
புயங்களை உயர்த்தி யிந்தப்
பூமியை பசுமை யாக்க
செயப் பட எழுமின் !எங்கள்
இளைஞரே !நாமே சக்தி !

உங்கள் அன்பு



பாசத்தைக் காட்டி
இதயத்தை உரிமையாக்க வைத்தது
உங்கள் அன்பு
உள்ளத்து உணர்வுகளில்
நட்பின் இலக்கணத்தை கற்றுத்தந்தது
உங்கள் அன்பு
இதயத்தை நாடி
உறவினை தேடி
பாசத்தைக் காட்டியது
உங்கள் அன்பு
முக நூல்
நட்பு வட்டத்துக்கோர் உதாரணம்
உங்கள் அன்பு
இதயத்துக்குள் இடம்பிடித்து
உதிரத்தில் தினம் தினம்
நினைவோடடமாய் ஓடிக்கொண்டிருப்பது
உங்கள் அன்பு
நாடி நரம்புகளில் சந்தோசம் பரவ
கண்ணின் மணியாய் உருண்டு வரும்
உங்கள் அன்பு
நான் சிந்திய கண்ணீர்த்துளிகளில்
சோகம் கரைய காரணமும்
உங்கள் அன்பு
பாசமான உயிரே !
வாழ்க!வாழ்க!நீவிர்
மண்ணில் பல்லாடு பொல் ஊண்டாது !
வாழ்க !

மனதிலே வெண்மை மலரினும் மென்மை
கனவில் வருகின்ற் பெண்மை - எனதுயிர்த்
தோழியாய் வந்தாள் துயரம் அகற்றினாள்
வாழிய க்ன்னியின் வாய்....!